‘ஸ்மார்ட் சாலை’…. இந்திய வம்சாவளி சிறுவன் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற காரின் மீது வேகமாக வந்த ட்ரக் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் ஆகியோரின் மகன் தேவ் நரன் (8) உயிரிழந்துள்ளான். இதற்கு முன்னதாக, அகமது (36), மற்றும் நர்கிஸ் பேகம் (62) ஆகியோரும் ஸ்மார்ட் சாலையில் கார் பழுதானபோது உயிரிழந்தனர். மேலும் 2019 முதல் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்துக்களில் உயிரிழந்த 53 பேரில் ஸ்மார்ட் சாலையால் மட்டும் 18 பேர் பலியாகினர்.

இந்த0 ‘ஸ்மார்ட் சாலை’ என்பது, நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிச்சாலை கூட்ட நெரிசலுக்கு ஏற்றாற்போல் பயன்பாட்டுக்கு விடப்படும். மேலும் அவசர காலத்தில், வாகனத்தில் பழுது ஏற்பட்டால் அந்த சாலையில் நிறுத்தி கொள்ளலாம். இதனால், வாகனங்கள் நிறுத்தப்பட்டதும், தொழில்நுட்ப உதவியோடு வாகனம் அந்த சாலையில் பழுதாகி நிற்பது குறித்து போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர்கள் சிக்னல் கொடுப்பார்கள். ஆனால், இந்த தொழில்நுட்பம் இதுவரை சரியாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதேபோல் பழுதான வாகனத்தை நிறுத்த சாலையோரம் இருந்த ‘hard shoulder’ என்ற இடம் ஸ்மார்ட் சாலைக்கு பின் அகற்றப்பட்டதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், “ஸ்மார்ட் சாலை பணிகளை நிறுத்தவேண்டும். அதோடு பல உயிர்கள் பலியானது அவர்களின் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான்” என்று கூறினர். தற்போது, ஸ்மார்ட் சாலைக்கு விதித்துள்ள தடை உயிர் இழப்புகளை தவிர்ப்பது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us