கனடாவில் இரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி

கனடாவின் ஸ்கார்பரோவில் பள்ளி மாணவி ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் 13 வயது சிறுமியை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசார், லேசான காயங்களுடன் 12 வயது சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சம்பவம் நடந்த பள்ளி தொடர்பில் பொலிசார் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றாலும், Cliffside பள்ளி என்றே சந்தேகிக்கப்படுகிறது.

பள்ளியில் குறித்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கு வெளியே அல்லது உள்ளே நடந்தனவா என்பதில் உறுதியான தகவல் வெளியாகவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைதான சிறுமி ஆகியோரின் பெயர்களையும் பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.

Contact Us