‘கோத்தபாயாவுடன் கதைச்சிட்டன்!! 2 நாளுக்குள்ள உன்னை துாக்குறன்…‘ யாழில் தோட்டக்காரனை அச்சுறுத்தும் கனடா புலம்பெயர் தமிழன்!!

 

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்களில் பலர் தமது நாட்டில் உள்ள உறவுகளை மறப்பதும் இல்லை. அத்துடன் தனக்கு புதிதான அற்புதமான கொம்பு ஒன்று முளைத்துவிட்டதாக நினைப்பதும் இல்லை. ஆனால் ஒரு சிலர் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இறங்கிய கையுடன் தங்களை இலங்கையில் உள்ள உறவுகள் எல்லோரும் தமது கால் துாசிக்கு சமம் என நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். இவ்வாறானவர்களில் பலர் தாம் வாழும் நாடுகளில் வேலை வெட்டி செய்யாது அந் நாட்டு அரசாங்கம் கொடுக்கும் அகதிக் காசுகளை வாங்கிக் கொண்டு தமிழ்கடைகளில் பதிவு செய்யாது திருட்டுத்தனமாக மிகக் குறைந்த ஊதியத்தில் வேலையும் செய்து கொண்டிருப்பார்கள். சில நாடுகளில் 3 பிள்ளைகள் பெற்றால் அதற்கு அந் நாடுகள் கொடுக்கும் சலுகைகளுக்காகவே 3 பிள்ளைகளைப் பெற்று திரிபவர்களும் உண்டு. இவ்வாறானவர்கள் அந்த அந்த நாடுகளில் பிரஜாஉரிமை பெற்றுவிட்டால் அவர்களது அட்டகாசத்துக்கு அளவே இருக்காது. அத்துடன் தன்னை தேவலோகத்து இந்திரனாகவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியாகவோ கருதத் தொடங்கிவிடுவார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களால் அறியப்பட்ட ஊத்தைச் சேது என அழைக்கப்படும் தன்னை அமெரிக்க ஜெனாதிபதிக்கு நிகராக உருவகித்து கதைக்கும் நோர்வே பிரஜா உரிமையுள்ள சேதுரூபனைப் போல் விசுப்புளாத்தி வேலை செய்பவர்களின் திருவிளையாடல்கள் பல உள்ளன. இவ்வாறானவர்களில் ஒருவர்தான் கனடா ரொரோன்ரோவில் வசித்துவரும் யாழ்ப்பாணத் தமிழனான ஜெயந்தன். ( முழுப் பெயர் அல்ல. பலராலும் அழைக்கும் பெயர்). இவர் 1995ம் ஆண்டளவில் இயக்கத்திடம் தனது வீட்டை அடைமானம் வைத்து அதன் மூலம் தனது அப்பா, அம்மா, தங்கையுடன் கொழும்பு செல்வதற்காக கொடுக்கப்பட்ட பாஸ் மூலம் யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பு சென்று தனது 20 வயதில் கனடா சென்றுள்ளார். இவர் கனடா சென்றவுடன் இயக்கம் இவரது வலிகாமத்தில் உள்ள வீட்டை கைப்பற்றிக் கொண்டது. அங்கு சென்ற இவர் தனது பெற்றோரையும் சகோதரியையும் கனடாவுக்கு அழைத்துவிட்டார். படையினரால் குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் அந்த வீடு இயக்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டது. ஆட்கள் இல்லாத நிலையில் இருந்த வீட்டை தனது உறவினர் ஒருவரை அமர்த்தி கனடாவில் இருந்து பராமரித்து வந்தார் ஜெயந்தன். நீண்ட காலத்தின் பின் குடா நாட்டில் இயக்கம் சமாதான நடவடிக்கைக்காக வந்து தங்கியிருந்த போது 2004ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் வந்த இவர் தனது வீட்டை நவீனமயப்படுத்தியதுடன் தனது வீட்டுக்கு அருகில் பங்குக் கிணற்றுடன் கூடிய 12 பரப்பு தோட்டம் ஒன்றையும் வாங்கிவிட்டு கனடா சென்றுவிட்டார்.

அதன் பின்னர்தான் பிரச்சனையே ஆரம்பமாகியது. அந்த பங்குக் கிணற்றில் உரிமையுள்ள இன்னொரு தோட்டக்காரன் தனது தோட்டத்துடன் சேர்த்து 2014ம் ஆண்டளவில் வீடு ஒன்றைக் கட்டியுள்ளான். அவனது காணிக்கான பாதை பிரதான பாதையிலிருந்து ஜெயத்தின் தோட்டக் காணிக்கு அருகால் பங்கு கிணற்றின் ஊடாகவே செல்கின்றது. ஜெயந்தன் காணி உறுதியில் தோட்டக்காரனின் காணிக்கு கிணற்றுக்கான பங்கும் வழி வாய்க்காலும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தோட்டக்காரனின் காணி உறுதியில் 6 முழ பாதையும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதை அடிபிடி தோட்டக்காரனுக்கும் கனடா ஜெயந்தனு்க்கும் தொடங்கியது. ஜெயந்தனின் வீ்ட்டில் அவனது மனைவியின் நெருங்கிய உறவுக்கார பெண் தனது கணவன், பிள்ளைகளுடன் வசித்துவருகின்றார். ஜெயந்தன் தனது தோட்டத்துக்கும் மதில் கட்ட தொடங்கிய போதே பிரச்சனைகள் ஆரம்பமாகியது. தோட்டக்காரனின் வீட்டுக்கு 3 முழம் பாதை மாத்திரமே ஜெயந்தன் விடச் சொல்லி மதில் கட்ட ஆயத்தப்படுத்திய போது அது தொடர்பாக தோட்டக்காரன் ஜெயந்தனிடம் பணிவாக தனது காணிக்கு 6 முழ பாதை விடச் சொல்லி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஜெயந்தன் சம்மதிக்கவில்லை. அந்த பாதைக்கான காணிக்குரிய பணத்தை தற்போதைய பெறுமதியில் தான் தருவதாகவும் தனக்கு சிறிய பாதை இருந்தால் எதிர்காலத்தில் வீட்டுக்கு வந்து போவதில் பெரும் சிக்கல் வரும் என கூறி கேட்ட போதும் ஜெயந்தன் காணியை விட்டுக் கொடுக்காமல் அடம்பிடித்துள்ளார். ‘விரும்பினால் உனது வீட்டையும் காணியையும் ஒரு விலை போட்டுத் தா ,.. நான் வாங்குகிறேன்‘ என கூறினாராம் ஜெயந்தன். அதன் பின்னர் தோட்டாக்காரன் பிரதேசசபையிடம் முறையிட்டு ஜெயந்தனின் மதில் கட்டும் நடவடி்ககை நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் ஜெயந்தனின் ருத்திரதாண்டவம் ஆரம்பமானது. தோட்டக்காரனின் வீட்டுக்கு சிஐடி எனத் தெரிவித்து சிலர் வந்துள்ளார். தோட்டக்காரனின் தங்கை இயக்கத்தில் இருந்து இறந்துள்ளார். தீவிர விசாரணைகள் நடந்துள்ளது. அதே நேரம் ஜெயந்தன் தோட்டக்காரனுக்கு கோல் எடுத்து ‘உனக்கு இது மட்டுமல்ல, இன்னும் பல விசாரணைகள் உள்ளது. 4ம் மாடி போகப் போறாய்‘ எனவும் அச்சுறுத்தியுள்ளார். அவ்வாறு அச்சுறுத்தி சில நாட்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் தோட்டக்காரனிடத்தில் வந்து விசாரணைகளை மேற்கொண்ட போது தோட்டக்காரன் கடும் அச்சமடைந்ததுடன் கனடா ஜெயந்தனிடத்தில் கெஞ்சும் நிலைக்கும் போயுள்ளார். இதே வேளை தனக்கு தெரிந்த ஊடகத்துறையுடன் தொடர்புள்ள ஒருவரிடம் இது தொடர்பாக கூறி கவலைப்பட்டுள்ளார். ஊடகத் துறையைச் சேர்ந்தவர் வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு விசுப்பிளாத்தி வேலை செய்பவர்களின் திருவிளையாடல்களை நன்கு அறிந்து கரை கண்டவர். உடனடியாக இது தொடர்பாக ஆராய்ந்த போது ஜெயந்தன் கனடாவிலிருந்து தோட்டக்காரன் தொடர்பாக பயங்கரமான பொய் பெட்டிசங்களை அங்குள்ள இன்னொரு விசுப்பிளாத்தியூடாக இலங்கை பாதுகாப்புத் தரப்பிற்கு தொடர்ச்சியாக அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கனடா ஜெயந்தனின் குரங்குச் சேட்டைகள் தொடர்பாக ஊடகத்துறையைச் சேர்ந்தவர் தெளிவான விளக்கத்தை தோட்டக்காரனுக்கு கொடுத்துள்ளார். அதாவது இலங்கையின் பாதுகாப்புத்தரப்புக்கு அனுப்பப்படும் பெட்டிசங்கள் எதுவானாலும் அவற்றை விசாரிப்பது அவர்களின் கடமை. அவ்வாறே அவர்கள் உங்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இது வழமையான ஒன்று.நீங்கள் இது தொடர்பாக கவலைப்படத் தேவையில்லை என கூறி தோட்டக்காரனின் அச்சத்தை அகற்றியுள்ளார். இதனையடுத்து ஜெயந்தனின் வாலாட்டல்களுக்கு அச்சப்படாது தோட்டக்காரன் மீண்டும் எதிர்க்கத் தொடங்கினான். இதனையடுத்து கனடா ஜெயந்தன் ‘கோத்தபாயாவுடன் கதைச்சிட்டன்!! 2 நாளுக்குள்ள உன்னை துாக்குறன்…‘ என தோட்டக்காரனை தொலைபேசியில் அச்சுறுத்தி கதைத்த ஓடியோ உட்பட பல ஓடியோக்கள் தோட்டக்காரனால் பதிவு செய்யப்பட்டு ஊடகத்துறையைச் சேர்ந்தவர் மூலம் பாதுகாப்புத்தரப்பினருக்கு அனுப்பபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Contact Us