“ஆன்லைன்ல ஆசை காமிச்சு மோசம் பண்ணிட்டியேடா “வலைவிரித்த வெளிநாட்டுக்காரனிடம் ஏமாந்த பெண் .

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் கோந்த்வாபகுதியில் வசிக்கும் ஒரு 38 வயதான பெண்ணொருவர் மிக பெரிய பணக்காரர் ஆவார் ,அவர் தன்னுடைய வீட்டிற்கு தெரியமால் ஆன்லைனில் பல ஆண்களுடன் அரட்டையடித்து வருவார் .இப்படி அவர் சமூக ஊடகத்தில் இருக்கும் போது, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு 40 வயதான நபர் அவருடன் நட்பு கொண்டார் .அந்த நபர் அந்த பெண்னிடம் தன்னை இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். அந்த பெண்ணும் அவர் வெளிநாட்டுக்கார என்றதும் அவரின் ஆசை வார்த்தையில் மயங்கி தினமும் அவரோடு சாட் செய்து வந்தார்.

இப்படி இருவரின் நட்பும் பல மாதங்களாக தொடர்ந்து வந்த போது, அவர் இந்த பெண் பணக்காரி என்பதையும் நிறைய பணம் வைத்திருப்பதையும் கண்டுபிடித்தார் .அதனால் ஒரு நாள் ,தான் அவருக்கு வெளிநாட்டு கரன்சி அடங்கிய ஒரு கிப்ட் பார்சல் அனுப்பியுள்ளதாக கூறி,அதை இந்திய விமனநிலையத்தில் பெற்றுக்கொள்ள சொன்னார் .பின்னர் சில நாள் கழித்து அந்த பெண்ணுக்கு சுங்கத்துறை அதிகாரி போல் ஒருவர் பேசி, அவருக்கு வெளிநாட்டில் பார்சல் வந்திருப்பதாகவும், அதற்கு டூட்டியாக 33 லட்சம் கட்டி பெற்றுக்கொள்ளுமாறு பேசி ஒரு அக்கௌன்ட் நம்பரை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொன்னார் .அவரின் பேச்சை நமபிய் அந்த பெண், அவர் சொன்ன அக்கௌண்டுக்கு 33 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பினார்.

அதன் பிறகு அவருக்கு எந்த பார்ஸலும் வரவில்லை .மேலும் அந்த லண்டன் நபரிடமிருந்தது போனும் வரவில்லை .பின்னர் அந்த பெண் ஏமாந்ததை உணர்ந்து , போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறன்றனர் .இதுபோல் 171 புகார் வந்திருப்பதாக போலீசார் கூறினர்.

 

Contact Us