கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வர அனுமதி

கோவேக்சின் தடுப்பூசியை முழுவதுமாக செலுத்தி கொண்ட பயணிகள், நவம்பர் 8ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு வர அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி, அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோ டெக் நிறுவனம் கூறியுள்ளது.

கோவாக்சின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் முற்றிலும் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ தடுப்பூசி ஆகும்.

இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களை அறிக்கையாக சமர்பிக்க உலக சுகாதார கூறியது.

இதையடுத்து அறிக்கையை சமர்பிக்க பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இறுதி முடிவை எடுக்க தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கடந்த புதன்கிழமை கூடியது, மேலும் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்காக கோவாக்சின் பரிந்துரைக்கப்பட்டது.

கோவாக்சின் அறிகுறி கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனையும், புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 65.2 சதவீத பாதுகாப்பையும் நிரூபித்துள்ளது.

கோவாக்சின் 3ஆம் கட்ட பரிசோதனையில் இறுதி ஆய்வை முடித்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதனை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் நவம்பர் 8ம் தேதி முதல் அமெரிக்காவுக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, ஆஸ்ட்ராஜெனேகா, கோவிஷீல்டு, சினோபார்ம், சினோவாக் ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்கள் அமெரிக்க செல்வதற்கும் அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

Contact Us