இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ள உலக வங்கி

உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. விவசாயம் மற்றும் காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்ளல் உள்ளிட்ட செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக தெரியவருகிறது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்ட நிலையில் இதன்மூலம் 16 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் ஹார்ட்விக் ஷாக்பர் தெரிவிக்கையில், கிராமபுற பகுதிகளில் வாழும் மக்களை சுகாதாரம், கல்வி சேவைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புக்களுடன் இணைக்க வேண்டுமாயின் இலங்கையில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான சாலை வலையமைப்பு அவசியமாகும்.

அளவிடப்பட்ட வீதி முதலீடுகள் இலங்கையின் மனித மூலதனத்தை துரிதப்படுத்தும், அது நிலையான மற்றும் சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Contact Us