பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டருக்கு பதவி உயர்வு

இந்திய விமானப்படையின் ஏஸ் பைலட் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மிக் 21 ரக போர் விமானங்களை இயக்கினார். கடந்த 2019ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கைபர் பக்துன்க்வா பகுதியின் பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதில், பாலகோட் பகுதியில் பாக். ராணுவ விமானத்தை அபிநந்தனின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

அவர்கள் தரப்பிலான தாக்குதலில் அவரது விமானம் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. அதில் உயிர் தப்பிய அவரை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது.

பின், இந்திய தரப்பிலான அழுத்தம் மற்றும் சர்வதேச தலையீடு காரணமாக அபிநந்தனை பாக். ராணுவம் விடுவித்தது.

மக்களின் வரவேற்புடன் நாடு திரும்பிய அவருக்கு, சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில்

அபிநந்தனுக்கு விமானப்படையின் குரூப் கேப்டன் பதவி உயர்வு தற்போது வழங்கப்பட்டுள்ளது. சில நாட்களில் அவர் புதிய பொறுப்பை ஏற்பார் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Contact Us