சீர்குலைந்த பொருளாதாரம்…. வெளிநாட்டு ரூபாய்க்கு தடை…. பிரபல நாட்டில் அதிரடி உத்தரவு….!!

தலீபான்கள் ஆட்சி அமைத்து வரும் ஆப்கானில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் அந்நாட்டின் ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. அதோடு, வெளிநாடுகளில் உள்ள ஆப்கான் சொத்துக்களும் முடக்கப்பட்ட நிலையில் வங்கிகள் கடும் பணநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. சர்வதேச நாடுகளும் தலீபான் அரசை அங்கீகரிக்காத போதும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரூபாய் நோட்டுகள் ஆப்கானில் புழக்கத்தில் உள்ளன.

அந்த வகையில், அமெரிக்க டாலருக்கு, எவ்வித தடையும் இன்றி பொருட்களை பெறலாம். அதேபோல், பாகிஸ்தானின் ரூபாய் நோட்டுகள் ஆப்கானின் தெற்கு எல்லை நகரில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், ஆப்கானுக்குள் அந்நிய செலாவணி நோட்டுகளை பயன்படுத்த தடை விதித்து, மீறினால் வழக்கு தொடரப்படும் என்றும் தலீபான்கள் எச்சரித்தனர்.

இது குறித்து தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபீயுல்லா முஜாஹித் கூறுகையில், “நாட்டின் பொருளாதாரம் மற்றும் நலன் கருதி அந்நிய செலாவணியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. எனவே, இஸ்லாமிய எமிரேட் அரசானது, குடிமக்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், பொது மக்களை என அனைத்து தரப்பு மக்களும் ஆப்கான் நோட்டுகளை பயன்படுத்த கட்டளை இடுகிறது. மேலும், வேறு நோட்டுகளை பயன்படுத்துவோர் மீது வழக்கு தொடரப்படும்” என்றும் கூறினார்.

Contact Us