நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்…. 11 பேருக்கு நடந்த துயரம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியா ஒன்றாக இருக்கின்றது. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நரினோ மாகாணம் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மலையடிவாரத்திலுள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தது.

இதனால் வீட்டிற்குள் இருந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய 11 நபர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதுமட்டுமின்றி நிலச்சரிவில் சிக்கிய 20 பேர் காணாமல் போய்விட்டதால் அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Contact Us