வோடபோனுடன் இணைந்து சோதனை…. அபார வேகம்…. பிரபல நோக்கியா நிறுவனம் தகவல்….!!

வோடபோன் குழு என்னும் உலகநிறுவனம் கம்பியில்லா தொலைதொடர்பு துறையில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் ஆகும். தற்போது, வோடபோனுடன் இணைந்து செல்போனில் நடத்திய 5G சோதனையில் வினாடிக்கு 9.85 GB வேகம் எட்டப்பட்டதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சோதனை குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடத்தப்பட்டது. இது குறித்து நோக்கியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், “80 GHz ஸ்பெக்ட்ரத்தில் E-Bond ஒலிக்கற்றைகள் வாயிலாக back end data transmission-ல் இந்த வேகம் எட்டப்பட்டுள்ளது” என பதிவிட்டிருந்தது.

இதனால், இந்தியாவில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், வோடபோன் நிறுவனத்திற்கு 26 GHz போன்ற உயர் அலைவரிசைகளை தொலை தொடர்பு துறை ஒதுக்கியுள்ளது. இதில் 1 GB என்பது 1024 MB ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Contact Us