“பணம் கொடுங்க ,பட்டம் கொடுக்கிறோம்” -டிகிரி படிப்பை கூவி கூவி விற்ற தம்பதிகள்

பஞ்சாபை சேர்ந்த முகேஷ், ரோஹி தம்பதிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரின் பீன்யாவில் வசிக்கின்றனர். இந்த தம்பதி முறைகேடாக மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்து, பணம் சம்பாதித்தனர். இதில் யாருக்கும் சந்தேகம் எழக்கூடாது என்பதால், பீன்யா அருகில், கல்வி நிறுவனம் திறந்து, ஐ.டி.ஐ., போன்ற படிப்புகளுக்கு, பயிற்சியளிப்பதை போன்று, காண்பித்துக்கொண்டனர்.

மேலும் இவர்கள் ஆள் மாறாட்டம் செய்து பணம் வாங்கிக்கொண்டு வேறு ஒருவரை எக்ஸாம் எழுத வைத்துள்ளனர் .மேலும் இவர்கள் பணம் வாங்கிக்கொண்டு போலியாக பட்ட படிப்பு சான்றிதழை பிரபல பல்கலை கழகங்களின் போலியான முத்திரையுடனே வழங்கியுள்ளார்கள் .ஒவ்வொரு பட்டத்திற்கும் இவர்கள் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்தனர் .இவர்களிடம் பலர் போலியான பட்டங்களை வாங்கிக்கொண்டு உலகின் பல நாடுகளில் பல உயர் பதவிகளில் இருக்கின்றனர் .இப்போது போலீசார் அவர்களை வலை வீசி பிடித்தனர் .இதனை தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இருந்த பல யுனிவர்சிட்டி நிர்வாகிகளும் ,வெளிநாட்டில் வேலை பார்க்கும் உறுதிகாரிகளும் அச்சத்தில் இருக்கின்றனர்

Contact Us