“என் தங்கையை தொடணும்னா ,நீ இதெல்லாம் விடணும்”-மாப்பிள்ளையை தாக்கிய மச்சினர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கிலு பகுதியில் வசிக்கும் ,இந்து மதத்தினை சேர்ந்தவர் 26 வயதான மிதுன் கிருஷ்ணன். இவர்அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான தீப்தி என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவர்களின் காதலை அவர்களின் வீட்டில் ஏற்காததால் அவர்கள் பெற்றோரின் சம்மதமின்றி கடந்த 29-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள் .

அதன் பின்னர் அந்த பெண்னின் சகோதரர் டேனிஸ் அந்த தங்கையின் காதலன் மிதுனிடம் தாங்கள் இந்து மதத்தை விடணும் என்றும் ,தங்களின் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால்தான் தங்களின் தங்கையுடன் வாழ முடியுமென்று கூறியுள்ளார் .அதன் பிறகு அந்த மிதுன் அந்த டேனிசின் வீட்டிற்கு சென்றுள்ளார் .அப்போது அந்த வீட்டிலிருந்த தீப்தியின் தாயார் அந்த மாப்பிள்ளையை கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறாமல் வீட்டினுள் வரக்கூடாது என்று கூறினார் .பின்னர் அங்கு வந்த தீப்தியின் சகோதரர் டேனிஸ் அந்த மாப்பிள்ளை மிதுனை கடுமையாக தாக்கினார் .இதில் படுகாயமுற்ற அந்த மிதுன் அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று தான் தனது மைத்துனரால் தாக்கப்பட்டதாக புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த தீப்தியின் சகோதரர் டேனிசை பிடித்து விசாரித்து வருகின்றனர் .

Contact Us