“வாட்ச்மேனோடு தண்ணியடிச்சது தப்பாப்போச்சே ..”ஒரு தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பில் குஜராத்தை சேர்ந்த 38 வயதான மணீஷ் பாய் படேல், தங்கியிருந்தார் .அவர் மருந்தாளுநராக பணியாற்றி தாஹிசரில் உள்ள அந்த குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.

நாளடைவில் அந்த மனிஷுக்கு அந்த அபார்ட்மென்டின் காவலாளியான ராகுளுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் தினமும் மது அருந்த தொடங்கினர் .அப்போது அந்த வாட்ச்மென் ராகுல் அந்த மணீஷிடம் நிறைய பணமிருப்பதை கண்டு கொண்டார் .அதனால் அவர் அந்த மணீஷை கொலை செய்து விட்டு அவரிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டார் .அதன் படி கடந்த மாதம் அந்த வாட்ச்மேன் அந்த மணீஷ் பணத்துடன் வரும்போது அவரை தலையில் அடித்து கொலை செய்து விட்டு பணத்துடன் தன் சொந்த ஊரான பீஹாருக்கு தப்பியோடிவிட்டார் .பின்னர் போலீசார் அந்த மணீஷ் கொலை வழக்கை விசாரிக்க தொடங்கினர் .அப்போது அந்த அபார்ட்மென்டின் சிசிடிசி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த வாட்ச்மென் பணப்பையுடன் ஒருவரை அழைத்து கொண்டு போவதை கண்டுபிடித்தனர் .பின்னர் போலீசார் பிகாருக்கு சென்று அந்த வாட்ச்சம்ன் ராகுல் மற்றும் இன்னொருவரையும் கைது செய்தனர்

Contact Us