யாழ் தெல்லிப்பளையில் அலங்கோல வேலையில் ஈடுபட்ட 19 வயது இளம் பெண் பொலிசாரால் கைது!!

 

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயதான இளம் பெண் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் என அறியப்படும் நபர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக

தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் பொலிஸார் அவரை தேடியதாகவும் பின்னர் இருவரும் மல்லாகத்திலிருந்து வெளியேறி தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில்

தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் இதனடிப்படையில் கடந்த பல நாட்களாக சந்தேகநபர்களை கண்காணித்துவந்த நிலையில்

நேற்று மாலை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Contact Us