யாழ்ப்பாணத்தில் இடமாற்ற பிரச்சனைக்காக வரும் பெண் ஊழியர்களை உடல்உறவுக்கு அழைக்கின்றார்களா அதிகாரிகள்??? கூறுவது யார்?

தென்னிலங்கை போன்று வடமாகாணசபையிலும் இடமாற்றங்களை வழங்காதிருக்க பாலியல் லஞ்சம் கோரப்படுவதான தகவல்கள் கிடைத்துள்ளன என ஜக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மத்தும பண்டார தெரிவித்தார். யாழில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், டொலர்களிற்காக அலையும் இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. அதிலும் பாலியல் லஞ்சம் கோரி பாதிக்கப்பட்ட பெண்களிற்கு நீதி கிடைப்பதென்பது கேள்விக்குறியே.

முன்னதாக உருவாக்கப்பட்ட காவல்துறை ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்றவற்றை கலைத்துவிடுவதில் இந்த அரசு வெற்றிபெற்றுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களிற்கோ பெண்களிற்கோ நீதி வழங்கும் காவல்துறையும் இலங்கையில் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதியும் கிடைப்பதென்பது கேள்விக்குறியே என்றார்.

 

Contact Us