தென்னிலங்கையில் பதிவாகிய பாரிய வெடிப்பு: காரணம் வெளியானது

 

தென்னிலங்கை பகுதியான மாத்தறை – வெலிகம, கப்பரதொட்ட, அவரியாவத்தை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் நேற்றைய தினம் பாரிய வெடிப்பு இடம்பெற்றிருந்த நிலையில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவ (Nihal Thalduwa) தெரிவிக்கையில்,

குறித்த வெடிப்புச் சம்பவம் அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்து அல்லது வேறு ஏதேனும் வெடிமருந்துகளால் ஏற்பட்ட வெடிப்பு அல்ல என அரசாங்க பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமையல் எரிவாயு கசிவே இந்த வெடிப்பிற்கு காரணம் எனவும் அரசாங்க பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Contact Us