சகிக்கவே முடியாது : 100க்கு மேற்பட்ட இறந்த உடல்களோடு செக்ஸ்- தற்செயலாக பிடிபட்ட ஒரு காம கொடூரன்: 2 கொலை செய்தார் என்பதும் பிடிபட்டது !

1987ம் ஆண்டு கெனல் மற்றும் றொமி என்ற 2 பெண்கள் சுமார் 30 நாட்கள் இடைவெளியில் கொலை செய்யப்பட்டார்கள். அன்று முதல் இன்று வரை, 33 ஆண்டுகளாக கொலையாளியை பொலிசாரால் பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த 2 பெண்களின் உடலில் காணப்பட்ட, வேறு ஒரு மனிதரின் DNA யை எடுத்து பொலிசார் பதிந்து வைத்திருந்தார்கள். பின்னர் கம்பியூட்டர் மயமாக்கப் பட்ட பின்னர், DNA …. டியிடலாக மாற்றப்பட்டு, சேமிப்பில் இருந்துள்ளது. சமீபத்தில் 2021ல் ஒரு இளைஞரை  கைது செய்த பொலிசார், அவரது குற்றச் செயல் பாரதூரமானது என்பதனால், அவரது DNA யை எடுத்து Data Base போட்டார்கள். உடனே கம்பியூட்டர், அவரது DNA வேறு ஒரு வழக்கில் தேடப்படும் குற்றவாளியின் DNA யோடு 90% சத விகிதம் ஒத்துப் போவதாக காட்டியது. ஆனால் அந்த கொலை நடந்த 1987ம் ஆண்டு குறித்த குற்றவாளி பிறக்கவே இல்லை. இதனால் குழம்பியப் போன பொலிசார்… மருத்துவ நிபுணர்களை நாடினார்கள்…  Source: Kent Police sets up helpline in anticipation of wave of calls amid fear David Fuller abused THOUSANDS of dead women and girls in mortuaries while working as a hospital electrician:

மருத்துவர்கள் ஒரு விடையத்தை குறிப்பாகச் சொன்னார்கள். அது பொலிசாரிடம் தற்போது சிக்கிய குற்றவாளியின் உறவினர் ஒருவராக இருக்கக் கூடும் என்ற விடையம். இதனை அடுத்து தம்மிடம் சிக்கிய குற்றவாளியின் உறவினர்களை அடுத்து அடுத்து தேடிய போது தான். 63 வயதாகும் டேவிட் புல்லர் என்னும் நபர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏன் எனில் 1987ல் கொலை நடந்த கிராமத்தில் அன்றைய வரும் டேவிட் அங்கே வசித்து வந்தார். திடீரென டேவிட் வீட்டுக்குச் சென்ற பொலிசார் தேடுதல் வேட்டை ஒன்றை நடத்தினார்கள். அவர்கள் அங்கே சென்றது,… இரட்டை கொலை பற்றி அறியவே. ஆனால் வீட்டில் உள்ள ரகசிய அறை ஒன்றை அவர்கள் கண்டு பிடித்தவேளை, சிக்கி சிதறி பரிதவித்துப் போனார்கள்… ஏன் எனில் கம்பியூட்டரில் மட்டும் 14 மில்லியன் செக்ஸ் புகைப்படங்கள், அது CD வடிவில் Floppy Disc வடிவில் மற்றும் ஹாட் ட்ரைவில் உள்ளது. அது போக அவர் NHS க்கு எலக்ரீஷனாக வேலை பார்த்துள்ளார்.

இதனால் 2 வைத்தியசாலைகளுக்கு சென்று வந்த டேவிட், பிண அறைகளுக்கு கூட சென்று வந்துள்ளார். பொதுவாக பிண அறைகளில் வேலை பார்க்கும் நபர்கள் மாலை 4 மணியோடு வேலை முடித்து வீடு சென்றுவிடுவார்கள். மாலை 7 மணிக்கு செல்லும் டேவிட் இரவு 11 மணி வரை பிண அறைகளில் நேரத்தை செலவிட்டுள்ளார். அதுவும் இறந்து போன பிணங்களோடு. 100 வயது மூதாட்டியின் பிணம் தொடக்கம், 9 வயது சிறுமியின் பிணத்தை கூட தகாத வகையில் தொட்டு , சில பிணங்களோடு உறவும் வைத்திருந்துள்ளார். தான் தொட்டு அனுபவித்த பிணங்களை, போட்டோ எடுப்பது. அவர்களின் பெயர்களை டயரியில் குறித்து வைத்திருப்பது,  டேவிட்டின் வழக்கம். பொலிசார் இரட்டைக் கொலை தொடர்பாக சென்ற வேளை. கடந்த 33 வருடங்களாக டேவிட் ஆயிரக் கணக்கான பிணங்களோடு நின்று எடுத்துக் கொண்ட படங்களை பாத்து திகைத்துப் போனார்கள். விசாரிக்கச்  சென்ற சி.ஐ.டி பொலிசாரே திகைத்த சம்பவம் என்றால் அது இதுவாக தான் இருக்க கூடும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கென்ட் பொலிசார் பெரும் விசாரணையை ஒன்றை ஆரம்பித்துள்ளார். 2 கொலைகள் தானா ? இல்லை மேலும் பல கொலைகள் இருக்கா என்று தெரியவில்லை. அத்தோடு நூற்றுக் கணக்கான பிணங்களோடு உறாவு கொண்ட இந்த நபரை எந்த லிஸ்டில் சேர்பது என்றே தெரியவில்லை. அப்படியான ஒரு சைக்கோ…. இது வரை பலர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இறந்த தமது உறவினர்கள் உடலில் கீறல் காயங்கள் இருந்தது என்றும். வேறு சிலர் பல தரப்பட்ட முறைப்பாடுகளை செய்து வருகிறார்கள். கேட்க்கவே மிகவும் அருவருப்பாக உள்ளது.  ஆனால் இப்படிப் பட்ட மனிதர்களும் உலகில் வாழ்கிறார்கள் என்பது தான், மிகவும் கொடுமையான விடையம்.

Contact Us