“அதிபர் ஜோபைடனின் தீபாவளி கொண்டாட்டம்!”.. மனைவியுடன் குத்துவிளக்கேற்றினார்..!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதுண்டு. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று அமெரிக்க நாட்டில் தீபாவளி பண்டிகை அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கக்கூடிய மசோதா நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் பிரதமர் ஜோ பைடன், மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியதோடு அவரின் மனைவியோடு வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கை ஏற்றி தீபாவளியை கொண்டாடியிருக்கிறார். இந்த புகைப்படம் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“அறிவு, ஞானம் மற்றும் உண்மை இருளில் இருக்கிறது என்பதை தீபாவளிக்கான ஒளி நமக்கு நினைவூட்டும். அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், என்று அனைத்து மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

Contact Us