கடற்கரையில் போதை பொருள் கும்பல்கள் மோதல்…. இருவர் உயிரிழப்பு…. சுற்றுலா பயணிகள் ஓட்டம்….!!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுகிறது. இதனிடையில் அந்த நாட்டின் கக்குன் நகரில் பாஹிமா என்ற பிரபலமான கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்நிலையில் அந்த கடற்கரைக்கு நேற்று நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தபோது, போதைப்பொருள் கடத்தல் கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தகவலறிந்து போலீசார் வருவதற்கு முன் மோதலில் ஈடுபட்டு இருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் கடற்கரைப் பகுதியிலிருந்து உடனே தப்பி ஓடிவிட்டார்கள். மேலும் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கடற்கரையில் இருந்த சுற்றுலா பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Contact Us