கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘விக்ரம்’ படத்தின் மாஸ் அப்டேட்…!!!

தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவம்பர் 7-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் விக்ரம் படத்தின் ஸ்பெஷல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவித்துள்ளது.

Contact Us