“வேலைக்கு வரும்போதெல்லாம் சேலையை பிடிச்சி இழுக்கிறாரே ” -முதலாளியின் மோகத்தால் பெண்ணின் கதி

குஜராத்தின் ராஜ்கோட் நகரின் ரத்தன்பூரில் யுவராஜ்சிங் பர்மர் என்ற பண்ணையார் வசித்து வந்தார் .அவருக்கு வாத்வான் தாலுகாவில் 30 ஏக்கர் நிலம் உள்ளது .அந்த பார்மர் அவரின் பண்ணையில் ஒரு கணவன் மற்றும் மனைவியை வேலைக்கு அமர்த்தினார்.அந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறார் .அந்த பண்ணையார் பார்மருக்கு அந்த பண்ணை வேலைக்கு வந்த பெண் மீது மோகம் பிறந்துள்ளது .அதனால் அவர் பலமுறை அந்த பெண்ணிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் .அப்போதெல்லாம் அந்த பெண்ணிடம் ஆடையின்றி நின்று அவரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

ஆனால் அந்த பெண் அவரின் ஆசைக்கு இணங்காமல் அவரை புறக்கணித்து வந்துள்ளார் . அதனால் கடந்த வாரம் அந்த பெண்ணுக்கு நிலத்தின் வருமானத்தில் 25 சதவீதம் தருவதாக ஆசை காமித்து வேலை கொடுத்தார் .பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முற்ப்பட்ட போது அவர் எதித்தார் .அப்போது அவரை அடித்து உதைத்து பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார் .அப்போது அவரின் மகனும் தாக்கப்பட்டார் .இதனால் மிகவும் வேதனையடைந்த அந்த பெண் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் .பின்னர் பொலிசுக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்து அந்த பாரம்ரை விசாரித்து வருகின்றனர்

Contact Us