“சொத்து கொடு ,இல்லேன்னா செத்து விடு” -ஒரு தாத்தாவுக்கு பேரனால் நேர்ந்த விபரீதம்

தமிழகத்தின் அரியலுார் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 90 வயதான அய்யாவு, . இவருக்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றன ,ஆனால் அவர் தன்னுடைய சொத்துக்களை தனக்கு பிறகுதான் உறவினர்கள் அனுபவிக்கலாம் என்று ,யாருக்கும் பிரித்து கொடுக்காமல் தன் வசமே சொத்துக்களை வைத்து கொண்டிருந்தார் .அதனால் அவரின் பிள்ளைகள் மற்றும் பேரன்கள் அவர் மீது கோபமாக இருந்தனர் .மேலும் பேரன் அசோக்குமார் என்பவர் தாத்தா எப்போது சாவது ,தனக்கு அவரின் சொத்துக்கள் எப்போது வருவது என்று கோபமாக இருந்தார் .

ஆனால் 90 வயதாகியும் அவரின் தாத்தா ஆரோக்கியமாக இருந்ததால் அந்த பேரன் அவரை தீர்த்து கட்டிவிட்டு சொத்துக்களை எடுத்துக்கொள்ள முடிவு செய்தார்
அதனால் அவரின் பேரன் அசோக்குமாருக்கும் அந்த தாத்தாவுக்கும் சொத்து தொடர்பாக வழக்கம் போல நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அசோக்குமார், அங்கு கிடந்த கட்டையால் அய்யாவுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அய்யாவு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை பற்றி தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அசோக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Contact Us