குழந்தையை கொன்று தாய் தற்கொலை – அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை

மூன்று மாத பெண் குழந்தையையும் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு அடுத்த கதக் மாவட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . கதக் மாவட்டம் கடா கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா கடாதா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இந்த தம்பதிக்கு ரூபஸ்ரீ என்ற மூன்று மாத பெண் குழந்தை உள்ளது.

தொழிலாளியான மல்லப்பா தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று காலையில் மல்லப்பாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அப்போது மல்லப்பா ஒரு அறையிலும் சுதாவும் குழந்தையும் ஒரு அறையிலும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லம் கஜேந்திரகடா போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். படுக்கையறையில் சுதாவும் 3 வயது குழந்தையும் மீட்டார்கள். மற்றொரு அறையில் தான் மல்லப்பா பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இந்த மரணங்கள் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மனைவி குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது.

கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிய வந்திருக்கிறது. குடும்பத்தகராறு காரணமாக மல்லப்பா இப்படி ஒரு செயலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர் . இல்லையேல் குடும்ப பிரச்சனையில் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் சுதா. அதை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் மல்லப்பாவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Contact Us