போதும் நிறுத்திக்கொள்ளலாம் என்று சொன்ன கள்ளக்காதலி – கடுப்பான வாலிபர் துப்பட்டாவை எடுத்து…

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த அஸ்வதி என்கிற 20 வயது இளம்பெண் தந்தை இல்லாத நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார் . திருமணமாகாத அஸ்வதி பிகாம் படுத்திருப்பதால் நல்ல வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். அப்போது தன்னுடன் பணிபுரிந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.

இதனால் தோழியின் கணவனுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இந்த விவகாரம் ஜெகன் மனைவிக்கு தெரிய வர, கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகராறு அதிகமாகவே கணவரை விட்டு பிரிந்து சென்று தாய் வீட்டில் போய் வசித்து வருகிறார்.

இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட அஸ்வதியும் ஜெகனும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள். திடீரென்று ஜெகன் வீட்டிற்கு வருவதை நிறுத்தி இருக்கிறார் அஸ்வதி.

அஸ்வதியிடம் போனில் பேசியபோது, போதும் நிறுத்திக்கொள்ளலாம். நமக்குள் இனி பழக்கம் வேண்டாம். எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துவிடலாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் அஸ்வதியை தேடி அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார் ஜெகன்.

அங்கே அவரின் தாயார் இல்லாமல் தனியாக இருந்த அஸ்வதியுடன் உல்லாசம் அனுபவிக்க நினைக்க, முதலில் இங்கிருந்து கிளம்பிவிடுங்கள். இனிமேல் என்னுடன் பேசுவதை நிறுத்தி விடுங்கள். என்னை பார்க்க வர வேண்டாம் என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

உன்னால்தான் என் மனைவி பிரிந்து சென்றுவிட்டாள். இப்போது நீயும் என்னை விட்டு போனால் நான் என்ன செய்வேன். அதனால் நீ என்னுடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருக்கிறார். அதற்கு மறுக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து இருக்கிறது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரப்பட்ட ஜெகன், அஸ்வதியின் துப்பட்டாவை எடுத்து அவரின் கழுத்தில் போட்டு இறுக்கி இருக்கிறார். இதில் அஸ்வதி துடிதுடித்து இறந்து விட அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி ஊட்டியில் தலைமறைவாக இருந்திருக்கிறார் .

வெளியே சென்ற அஸ்வதியின் தாய் வீட்டிற்கு வந்தபோது மகள் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் வந்து விபரம் சொல்ல போலீசார் வந்து இருக்கிறார்கள். அதை என் கழுத்தில் காயங்கள் இருந்ததை பார்த்து விட்டு இது கொலைதான் என்பதை அவர்களை உறுதி செய்திருக்கிறார்கள்.

அஸ்வதி இறப்பதற்கு முன்பாக அவருக்கு வந்த செல்போன் எண்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த செல்போன் காட்டிய சிக்னல் வைத்து ஆய்வு செய்தபோது அந்த சிக்னல் ஊட்டியில் காட்டியிருக்கிறது. இதையடுத்து ஊட்டிச் சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த ஜெகனை கைது செய்துள்ளனர். அவர் அஸ்வதியை கொன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us