3 அமெரிக்க ஜனாதிபதிகள் கலந்து கொண்ட கொலின் பவலின் மரணச் சடங்கு- கடும் 5 அடுக்கு பாதுகாப்பு !

முன் நாள் அமெரிக்க உள்துறை செயலாளர் கொலின் பவலின் மரணச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், முன் நாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஒரு சம்பிரதாய அடிப்படையில் அல்லது, மனிதாபிமான அடிப்படையில் கூட, ரம் இதில் கலந்து கொள்ளவில்லை. கொலின் பவல் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் முன் நாள் ஜனாதிபதி பில் கிளிங்ரனின் மனைவி ஹெலரி கிளிங்ரன் கலந்துகொண்டார். ஆனால் பில் கிளிங்ரனால் வர முடியவில்லை. அவர் உடல் நலக் குறைவில் உள்ளார்.

பெண்டகன் பாதுகாப்பு நிலையத்திற்கு சொந்தமான வளாகம் ஒன்றில் இந்த இறுதிக் கிரிஜைகள் நடைபெற்றது. சுமார் 5 அடுக்கு பாதுகாப்பு அங்கே போடப்பட்டு. மிக மிக முக்கியமான நபர்கள் மட்டுமே அங்கே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

Contact Us