ட்ரோன் தாக்குதலைச் சமாளிக்க 650 மில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்க ஏவுகணைகளை வாங்க சவுதி அரேபியா முடிவு

ட்ரோன் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் 650 மில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன வான்-விமான ஏவுகணைகளை சவுதி அரேபியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. AIM-120C மேம்பட்ட நடுத்தர தூர ஏவுகணைகள் வாங்குவதற்கு சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்திருந்தது. குறிப்பாக ஏமனில் இருந்து ஆளில்லா விமானத் தாக்குதலை முறியடிக்க அமெரிக்க ஏவுகணைகள் உதவும் என்றும் சவுதி நம்பிக்கை தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள AIM-120C ரகத்தைச் சேர்ந்த 280 ஏவுகணைகள் வாங்க சவுதி திட்டமிட்டுள்ளது.

Contact Us