பிச்சைகாரர்களுக்குள் சண்டை: ஒருவர் குத்தி கொலை… காவல் நிலையம் எதிரில் பரபரப்பு

காட்பாடியில் காவல்நிலையம் அருகில் ஆதரவற்ற பிச்சைகாரர்களுக்குள் ஏற்பட்டதகராறில் ஆதரவற்ற முதியவர் கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம்,காட்பாடி காவல்நிலையம் எதிரில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு ஆதரவற்ற முதியவர்கள், பிச்சைகாரர்களும் பிச்சை எடுத்து உண்டு தங்கி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சுமார் 50 வயது மதிக்கதக்க ஒரு பிச்சைகாரருக்கும் மற்றொரு ஆதரவற்ற பிச்சைகாரருக்கும் ஏற்பட்ட தகராறில் 50 வயது ஆதரவற்ற பிச்சைகாரர் மற்றொரு பிச்சைக்காரரை கத்தியால் சரமாரியாக குத்திகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

காவல்நிலை அருகிலே நடந்த இந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்தவர் யார் என காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருவதுடன் இறந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மற்றொரு பிச்சைக்காரரை தேடி வருகின்றனர்.

Contact Us