மகளுக்கு துரோகம்! மருமகனுடன் மாமியார் தகாத உறவு! கடலூர் கொலையின் அதிர்ச்சி பின்னணி

கடலூர்: கடலூர் மாவட்டம், வேப்பூரில், மருமகனைக் கொன்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மாமியாரை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் அவர்களுக்குள் திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் தெரிய வந்தது. கடலூர் மாவட்டம், வேப்பூர், கழுதூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் வேல் முருகன்(27). இவருக்கும் உறவினர் குமுதாவின் மகள் பவித்ராவுக்கும் திருமணம் நடந்தது, பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

பிரசவத்திற்காக, பவித்ரா, வேப்பூரில் உள்ள தாய் குமுதா வீட்டிற்குச் சென்றார். மனைவி பவித்ராவை பார்க்க, வேல் முருகனும் தாய் வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில் வேல் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டன.

இருப்பினும் இதை நம்பாத வேல் முருகனின் தாய் மலர்கொடி, வேல்முருகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். டிஎஸ்பி சிவா ஆலோசனைப்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு, வேல் முருகன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது மாமியார் குமுதாவிற்கும், மருமகன் வேல் முருகனுக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. சம்பவத்தன்று, குமுதாவை ஆசைக்கு இணங்குமாறு, வேல் முருகன் வற்புறுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட கைகலப்பில் வேல் முருகன் கழுத்தை நெறித்துக் கொன்ற குமுதா, அவரை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது அம்பலமானது, இதையடுத்து, குமுதாவைக் கைது செய்த போலீசார், அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.

 

Contact Us