சொகுசு காரில் கொண்டுச் சென்று வீசப்பட்ட சடலம்! – கொழும்பில் சம்பவம்

கடந்த மாதம் 26ஆம் திகதி காலை வனவாசல பொசன்வத்தை பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த 40 வயதான மொஹமட் இர்ஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நண்பர்கள் குழுவினால் கடத்தப்பட்ட இவர், கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட அவர், வனவாசலை பொசோன்வத்தை பகுதிக்கு சொகுசு காரில் கொண்டு செல்லப்படும் காட்சி தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிஸார் இன்று வெளியிடடுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் களனி பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us