திருகோணமலையில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது

திருகோணமலை – கன்னியா, மாங்காயூற்று பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறித்த பெண்ணை சோதனையிட்ட போது 20.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், அவரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Contact Us