50 ஜமேக்கா கிரிமினல்களை திருப்பி அனுப்பும் பிரிட்டன்: பலருக்கு நிலந்தர வதிவுரிமை உள்ளது இருப்பினும்…

பிரித்தானியாவில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட 50 ஜமேக்கா நாட்டு கறுப்பின இளைஞர்களை, ஜமேக்காவுக்கே திருப்பி அனுப்ப ஹோம் ஆபீஸ்(உள்துறை அமைச்சு) முடிவெடுத்துள்ளது. இவர்களில் பலர் சிறுவர்களாக இருக்கும் போது பிரித்தானியாவுக்குள் வந்தவர்கள் என்றும். பலருக்கு பிரித்தானிய நிலந்தர வதிவுரிமை உள்ளது. அடுத்த கட்டமாக அவர்கள் பிரித்தானிய குடியுரிமை அப்பிளை செய்ய முடியும். ஆனால் அதனை விலக்கி, உள்துறை அமைச்சு அவர்களை நாடு கடத்தவுள்ளது. இதனை எதிர்த்து 50 பேரும் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில். நீதிபதிகளே இதற்கான முடிவை எட்ட உள்ளார்கள். தற்போது பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டம் …

முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் கடுமையாகி வருகிறது. விசாவில் உள்ள குடியேறிகள் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கான குடியுரிமை ரத்தாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

Contact Us