கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு…. 10 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள நைஜீரியாவில் ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று கொலை, கொள்ளை உட்பட பணத்திற்காக பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் கால்நடை கடத்தலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது.

தற்போது, இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்நாட்டின் கடுனா மாகாணத்தில் அமைந்துள்ள யக்பக் மற்றும் அங்வான் ரகுகோ ஆகிய 2 கிராமங்களுக்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அதோடு, கிராம மக்களின் வீடுகளையும் அந்த கும்பல் சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரு கிராமங்களிலும் மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இராணுவம் மற்றும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Contact Us