புகழ்பெற்ற பாடகரின் இசை நிகழ்ச்சி.. கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி.. அமெரிக்காவில் பரிதாப சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹவுஸ்டன் என்ற நகரின் என்ஆர்ஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகரான ட்ரயஸ் ஸ்கார்ட்டின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இசை நிகழ்ச்சி தொடங்கி, நடந்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஆயிரக்கணக்கான மக்கள், நிகழ்ச்சி நடந்த மேடை பக்கமாக சென்றிருக்கிறார்கள்.

இதனால், திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்திருக்கிறார்கள். கூட்டம் அதிகரித்ததால் கீழே விழுந்து கிடந்தவர்கள் மீது பலர் ஏறி சென்றிருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு, சம்பவயிடத்திற்கு சென்ற காவல்துறையினர் இசை நிகழ்ச்சியை நிறுத்தினர்.

அதனையடுத்து, அனைத்து மக்களையும் அந்த பூங்காவிலிருந்து வெளியேற்றியுள்ளனர். விழுந்து கிடந்தவர்களையும், காயம் ஏற்பட்டவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். எனினும், அதில் எட்டு நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Contact Us