இரு நாடுகளிடையே தொடரும் மோதல்…. காரணம் என்ன….? எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

ரஷியா, உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்தது. இதன்பின், உக்ரைனுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளித்து வருகிறது. தற்போது, கடந்த சில நாட்களாக ரஷிய அரசு அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் உட்பட 90,000 வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது.

இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க வாய்ப்பிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்காவின் CIA தலைவர் வில்லியம் பர்ன்ஸ் ரஷியா சென்றார். அங்கு ரஷிய உளவு அமைப்பின் தலைவரான நிகோலோ பட்ருஷ்வை மாஸ்கோவில் சந்தித்து, இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

மேலும், உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வரும் ரஷியாவை எச்சரிக்கவே CIA தலைவர் மாஸ்கோ சென்றதாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் அரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு, உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவிக்கும் பட்சத்தில் அமெரிக்க படைகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Contact Us