ஒன்ராறியோ மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய Pit Bull விவகாரம்

ஒன்ராறியோ அரசாங்கம், மாகாணத்தின் pit bull தடை தொடர்பான விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. ஒன்ராறியோவில் தடை செய்யப்பட்ட pit bull வகை நாய் இனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் தற்போது கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒன்ராறியோவில் 2005 முதலே pit bull நாய்களை தடை செய்யப்பட்டுள்ளது. ரொறன்ரோவை சேர்ந்த ஒருவரை இரண்டு pit bull நாய் கடுமையாக தாக்கிய நிலையில், அரசாங்கம் தடை செய்யும் முடிவுக்கு வந்தது.

அரசாங்கத்தின் இந்த கம்போக்கு நடவடிக்கை செல்லப் பிராணியாக நாய் வளர்ப்பவர்களை கொந்தளிக்க வைத்துள்ளதுடன், குறித்த நடவடிக்கையானது நாய்களின் உரிமையாளர்களை தண்டிப்பதற்கு ஒப்பானது என காட்டமாக விமர்சனம் செய்தனர்.

மட்டுமின்றி, pit bull நாய்களை தொடர்புடைய அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்ததும் பொதுமக்களை கொதிப்படைய வைத்தது. இந்த நிலையில், நாய் உரிமையாளர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்ராறியோ அரசாங்கம்.

அதில், pit bull இனம் என கருதி பறிமுதல் செய்யப்பட்ட நாய்கள் அனைத்தும், உரிய சோதனைக்கு பின்னர் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி இந்த விவகாரம் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றே, அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. pit bull இனம் என கருதி ஒன்ராறியோவில் pit bull terriers, Staffordshire bull terriers, American Staffordshire terriers மற்றும் American pit bull terriers ஆகிய நாய் இனங்களை தடை செய்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த சட்டத்தில் வரைமுறை கொண்டுவரப்பட்டு, உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒன்ராறியோ முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Contact Us