மாளிகவத்தை பாத்திமா இவர் தான் குப்பை மேட்டில் சூட்கேசுக்குள் சடலமாக மீட்க்கப்பட்டார் !

சப்புகஸ்கந்தை பகுதியில் சூட்கேஸிற்குள் அடைக்கப்பட்ட நிலையில், குப்பை மேட்டில் மீட்கப்பட்ட சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மாளிகாவத்தையில் வசிக்கும் 45 வயதுடைய மொஹமட் சபீக் பாத்திமா என்ற 2 பிள்ளைகளின் தாயாரே கொல்லப்பட்டு, சூட்கேஸிற்குள் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பை மேட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து, பொலிசார் மேற்கொண்ட சோதனையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

மாளிகாவத்தை தேசிய வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் தனது மனைவி கடந்த 28ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் புளூமெண்டல் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அடகு வைத்த தங்க நகைகளில் சிலவற்றை மீட்பதற்காக முச்சக்கர வண்டியில் மற்றுமொரு பெண்ணுடன் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தங்க நகைகளை மீட்டு விட்டு வண்டியில் வீடு திரும்பும் போதே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த பெண்ணுடன் தங்க நகைகளை மீட்க சென்ற பெண்ணுக்கும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியும் விசாரணைக்காக பொலிசார் தேடி வருகிறார்கள்.

அவருடன் முச்சக்கர வண்டியில் சென்ற பெண், மட்டக்குளி, சுமித்புர பகுதியை சேர்ந்தவர். அவர் தற்போது வீட்டில் இல்லையென கூறப்படுகிறது.

Contact Us