பிக்பாஸ் கொளுத்திப் போட்ட பட்டாசு.. சலுகை இல்லாமல் வெளியேற்ற போகும் கமல்

பிக்பாஸ் கொளுத்திப் போட்ட பட்டாசு எல்லாம் பயங்கரமாக வெடிச்சுக்கிட்டு இருக்கு என்ற கமலின் வசனத்துடன் இன்றைய பிக் பாஸ் சீசன் 5 எபிசோடு ஆரம்பிக்கிறது. நேற்று தலைவர் பாட்டுடன் ஆரம்பித்த பிக்பாஸ் வீடு, தலைவர் பதவிக்கான செண்பகமே செண்பகமே டாஸ்க் இல் வீடு கலவரம் ஆனது.

ஆரம்பத்தில் இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டத்தை நாமினேஷன் சற்று வித்தியாசமாக ராக்கெட்டில் போட்டியாளர்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. எப்போதும் வெளியேறும் 2 நபர்களை நாமினேட் செய்ய சொல்லும் பிக்பாஸ் இந்த வாரம் காப்பாற்றப்படும் இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்க சொன்னார்.

தீபாவளிக் கொண்டாட்டத்தில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்றைய ப்ரோமோவில் கமல் பண்டிகைகளுக்கு சலுகை கொடுக்கலாம், ஆனால் செலவுகள் இல்லாமல் இருக்காது என்றார்.

இதனால் இந்த வார பிக்பாஸில் போட்டியாளர் நிரந்தரமாக வெளியேற்றப்படாமல் தனி அறையில் இருந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

https://youtu.be/aTFz_1EdcT4

Contact Us