தீவிரம் அடையும் போர்…. அமெரிக்கர்கள் நாடு திரும்ப வலியுறுத்தல்…. பிரபல நாட்டில் பதற்றம்….!!

கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா அரசுக்கும், டைகிரே விடுதலை முன்னணி என்னும் போராளி அமைப்புக்கும் மோதல்கள் நிலவி வருகிறது. இதனால், டைகிரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அஹமது உத்தரவு அளித்தார். இதனை தொடர்ந்து இராணுவ நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

மேலும், டைகிரே மக்கள் விடுதலை அமைப்புக்கு ஆதரவாக 9 குழுக்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதன் விளைவாக அந்நாட்டில் பொருளாதாரம் அதிகளவில் நலிவடைந்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது தனது பேஸ்புக் கணக்கில், “நாட்டு மக்கள் அனைவரும் போராளி அமைப்பினரை மண்ணுக்குள் புதைக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததால் அவருடைய பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. மேலும், அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 9 குழுவினரும் ஆட்சியை கலைப்பதில் உறுதியாக இருப்பதால் உள்நாட்டு போர் உச்சம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே, அந்நாட்டில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

Contact Us