கொழும்பிலிருந்து யாழிற்கு பயணிகளுடன் வந்த ஹைஏஸ் வாகன சாரதி பயணிகளை காப்பாற்றிய பின் மாரடைப்பால் உயிரழப்பு!!

 

கொடிகாமத்தில் வாகன சாரதியொருவர் மாரடைப்பினால் உயிரிழந்தார். பயணிகளை ஏற்றி வந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வவுனியா வீரபுரத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயராஜ் (61) என்பவரே உயிரிழந்தார்.

கொழும்பிலிருந்து ஹைஏஸ் வாகனமொன்றில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வந்தார். கொடிகாமத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டதும், வாகனத்தை நிறுத்தி விட்டார். உடனடியாக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிரிழந்தார்.

Contact Us