லண்டனில் வேறு நபரின் ID யில் 7 வருடம் வாழ்ந்த ஷரிஷ்: கொரோனா ஊசி போடப் போய் மாட்டிக் கொண்டார் !

பிரித்தானியாவில் 7 வருடங்களாக, வேறு ஒரு நபரின் தகவல்களை பாவித்து வாழ்ந்து வந்த ஷரீஷ் என்னும் நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். உண்மையான நபர் கொரோனாவுக்கான ஊசியை போடச் சென்றவேளை. ஏற்கனவே உங்களுக்கு ஊசி போட்டு விட்டோம் என்று NHS கூறியுள்ளது. பிறந்த திகதி முதல் கொண்டு அனைத்துமே சரியாக உள்ளது. இதனை அடுத்து அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிசார் CCTV கமராவை பார்த்தவேளை, ஷரீஷ் என்ற நிஜப் பெயர் கொண்ட இன் நபர், டயஸ் என்ற பேரில் வாழ்ந்து வந்துள்ளார் என்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் கோவா மாநிலத்தை சேர்ந்த ஷரீஷ், ஒரு கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர். அவர் லண்டன் வந்த பின்னர்…

அங்கு ஹவுன்சிலோவில் தங்கி விட்டார். இன் நிலையில் ஒரு ஏஜன்டிடம் சுமார் 64,000 ஆயிரம் பவுண்டுகளை கொடுத்து, டயஸ் என்ற நபரின் எல்லா தகவல்களையும் பெற்றுள்ளார். அது போக டயஸ் என்ற நபர் லண்டனில் இல்லை என்றும். அன் நபர் கனடா சென்றுவிட்டதாகவும் கூறிய ஏஜன்ட், பல போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து விட்டு. 64,000 ஆயிரம் பவுண்டுகளை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் டயஸ் என்னும் நபர் லண்டனில் தான் வசித்து வந்துள்ளார்.

Contact Us