பிறந்தநாள் பரிசு கேட்ட கமல்: சென்னை வெள்ளத்திலும் வேட்டிய மடிச்சுக்கட்டி கிளம்பிய ரசிகர்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கமல் ஹாசன் கேட்ட பரிசை கொடுக்க ரசிகர்கள் கிளம்பிவிட்டார்கள்.
உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நல்ல நாளும் அதுவுமா ஆண்டவர் ஒரு ட்வீட் போட மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கமல் ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்க முடியும் என்றார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் கமலின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கிளம்பிவிட்டனர்.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் விக்ரம் படத்தின் Glance நேற்று மாலை வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லன். மேலும் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விக்ரம் படத்தை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

Contact Us