“கணவரை நம்பி குழந்தையை அனுப்பிய பெண்!”.. எரிந்த வாகனத்திற்குள் சடலமாக கிடந்த குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டனை சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் ஃபேஷன் உலகில் பிரபலமடைந்தவர். இவரின் கணவர் பிரபல டிசைனரான Clemens Weisshaar, ஜெர்மனை சேர்ந்தவர். இத்தம்பதி, கடந்த ஜூலை மாதத்தில் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு, Tasso என்ற 3 வயது மகன் இருக்கிறார். தம்பதியர் இருவரும் போர்ச்சுகல் நாட்டில் வெவ்வேறான பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இதனால், Clemens தன் மகனை அதிக நாட்களாக பார்க்கவில்லை.

இந்நிலையில் அவர், தன்னோடு மகனை அனுப்புமாறு, மனைவியிடம் கேட்டிருக்கிறார். நவம்பர் மாதம் முதல் தேதி அன்று, அழைத்து வருவதாக கூறியிருக்கிறார். எனவே, குழந்தையை கணவரோடு, Phoebe அனுப்பியிருக்கிறார். ஆனால், அவர் திரும்ப வரவில்லை. இதனால், பதறிப்போன Phoebe காவல்துறையினரிடம் இது தொடர்பில் புகார் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் Santa Margarida da Serra என்ற மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்த ஒரு வாகனத்திற்குள் குழந்தை இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்ற சிலர் கண்டறிந்துள்ளார்கள். மேலும், அதனை தொடர்ந்து, சற்று தூரத்தில் குழந்தையின் தந்தையும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களோடு இறந்து கிடந்திருக்கிறார்.

காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள். இருவரும் இறந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆகியிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. Clemens, தன் மகனைப் பிரிய மனமின்றி, அவரைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்திருப்பார் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Contact Us