தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகள்…. இதன்மூலம் பிழைக்க…. பிரெஞ்சு நகரத்தின் புதிய திட்டம்….!!

பிரான்சில் தண்ணீரில் மூழ்கி உயிரிழத்தல் அதிக அளவில் நிகழ்கின்றது. இதனிடையில் மற்றொரு புறம் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியோர் தண்ணீர் தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிகிறது. அதற்கு ஒரு காரணம் தனியார் நீச்சல் குளங்களில் சென்று அதை கற்றுக்கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை என்பதே ஆகும். இதனால் பிரான்சின் Marseille நகரவாசிகள் இந்த மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். அதாவது தனியாரில் கற்று கொள்ள இயலாதவர்கள் தங்கள் வீட்டில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சியாளர்கள் உதவியுடன் தெரிந்துகொள்ள இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Marseille இல் 10 முதல் 11 வயது வரை இருப்பவர்களில் 40 முதல் 50 சதவிகிதத்தினருக்கு நீந்தத் தெரிவதில்லை. இதில் குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தில் உள்ள 11 முதல் 12 வயது இருப்பவர்களில் 75 சதவீத மாணவ மாணவிகளுக்கு நீச்சல் தெரியவில்லையாம். ஆகவே ஒருபுறம் நீச்சல் தெரியவில்லை என்ற உணர்வு இருக்க, மறுபுறம் லைஃப் கார்டு போன்ற தண்ணீர் சம்பந்தமான வேலைகளுக்கு அவர்கள் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த திட்டத்தை உருவாக்கியுள்ள Marseille நகரத்தவர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

இந்த திட்டம் கோடையில் துவங்கிய நிலையில் இதுவரை 4 நீச்சல் குளங்களில் 20 இளைஞர்கள் இதை கற்றுக் கொண்டனர். அவர்களில் 5 பேர் லைஃப் கார்டு பயிற்சியில் தேர்ச்சி பெற்று விட்டார்கள். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தபடியாக 15 நீச்சல் குளங்களில் 75 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு பட்டயப்படிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. பிரான்சில் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதுவும் 25 வயதுக்கு கீழ் இருப்பவர்களின் உயிரிழப்புகள் தண்ணீரில் மூழ்கி தான் நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிர் இழப்புகளில் இருந்து பிழைத்துக்கொள்ளவும், வாழ்வில் ஒரு தண்ணீர் தொடர்பிலான பணி மூலம் பிழைக்கவும் Marseille நகரம் எடுத்துள்ள முயற்சி உண்மையிலேயே பாராட்ட தக்க ஒன்றாக இருக்கிறது.

Contact Us