அண்ணனை அடித்து கொன்ற தங்கை – மீனவர் கொலையில் வெளியான சிசிடிவி காட்சிகள்

சொத்தில் பங்கு கேட்டு அண்ணனை அடித்துக்கொன்ற தங்கை குடும்பத்தின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறது குளச்சல் போலீஸ். குமரியின் அடித்துக்கொலை செய்யப்பட்ட மீனவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மீனவர் கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆனால் அவரை அடித்துக் கொன்றது வேறு ஒருவர் என்பது சிசிடிவி காட்சியின் மூலம் தெரிய வந்ததால் இந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது போலீசாருக்கு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் புருனோ. விசைப்படகுகளை பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். ஆழ்கடலில் சிக்கியிருக்கும் படகுகளை பைபர் படகுகளின் உதவி மூலம் மீட்டு வரும் பணியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். மீன்பிடி தொழிலும் செய்து வந்துள்ளார்.

கடந்த மாதம் மீன்பிடித் தொழிலுக்கு சென்று திரும்பி வந்த புருனோ, தனது சகோதரியிடம் சென்று தனது சொத்தில் உள்ள பங்கை கேட்டிருக்கிறார். அதற்கு தங்கை, 27ஆம் தேதியன்று வீட்டில் வந்து பேசுமாறு அழைத்திருக்கிறார். ஆனால் இருபத்தி ஏழாம் தேதி சென்று அதுகுறித்து பேசாததால் கடந்த 2ஆம் தேதி அன்று மது அருந்திவிட்டு தன் தங்கையிடம் சொத்தில் பங்கு கேட்பதற்காக சென்றிருக்கிறார்.

தங்கை வீட்டிற்கு சென்று சத்தம்போட்டு சொத்தில் பங்கு கேட்டபோது அவரது தங்கையின் குடும்பத்தினர் புருனோவை சாலையில் தள்ளி கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் படுகாயம் அடைந்த அவரை ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்தோணி என்பவர்தான் புருனோவை தாக்கி விட்டதாக கருங்கல் போலீசில் புகார் அளிக்க , போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து அவரை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புருனோ சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையில் புருனோ மீது தங்கை குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. தங்கை குடும்பத்தார் தாக்கப்பட்டதால்தான் புருனோ உயிரிழந்திருப்பது தற்போது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.

Contact Us