“அடிக்கடி ஆட்டோக்காரனோட அலையறியாமே ..” -அடுத்து டீனேஜ் பெண்ணின் பெற்றோர் செய்த கொடூரம்

தமிழகத்தின் வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற ஆட்டோ டிரைவரின் மகன் 17 வயதான கோகுல் ,அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது பணக்கார வீட்டு பெண்ணை காதலித்து வந்தார் .அதனால் அந்த பெண் அடிக்கடி அந்த ஆட்டோ காதலனோடு ஜாலியாக ஆட்டோவில் காதல் புரிந்து வந்தார் .இதை அந்த பெண்ணின் பெற்றோரிடம் சிலர் கூறிவிட்டனர்

கோகுல் தங்களின் மகளை காதலிப்பது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் அந்த கோகுல் மீது கோபம் கொண்டனர் .இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு வேலை முடித்து வீட்டுக்கு சென்ற கோகுலை சாயிநாதபுரத்தில் மடக்கி சரமாரியாக தாக்கினர்.இந்த தாக்குதலில் படுகாயமடைடந்த கோகுலை அவர்கள் அங்கேயே நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் வீசி விட்டு ஓடி விட்டனர் .இதன் பிறகு அவரின் உறவினர்கள் அந்த கோகுலை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .சில நாள் சிகிச்சைக்கு பிறகு அந்த கோகுல் இறந்து விட்டார்
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை ராஜகுரு ,அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், நண்பர்கள் தண்டபாணி, செந்தில்,மாதவன்,சிட்டிபாபு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Contact Us