“எதை காமிச்சு என் காதலனை மயக்கினே” -முன்னாள் காதலியால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் சித்லகட்டா பகுதியில் 24 வயதான கங்கராஜூ,என்ற வாலிபர் வசித்து வந்தார் இவர் படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .அவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயதான கங்கோத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்தார் .இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் காதலித்தனர்.

இந்நிலையில் அந்த கங்கராஜூவை அவரின் அக்கா மகளை கல்யாணம் செய்து கொள்ள அவரின் உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர் .அதனால் அவர் என்ன செய்வதென்று புரியாமல் விழித்து வந்தார் .அதனால் அவரின் காதலியை மறந்து விட்டு உறவினர் சொல்லும் பெண்ணை மணக்க முடிவு செய்தார்
அதனால் பத்து மாதங்களுக்கு முன் தன் அக்காவின் மகள் 20 வயதான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட அவரின் காதலி கங்கோத்ரி அந்த காதலன் மீது கோபத்தில் இருந்தார். இதனால் அவரின் மனதை மாற்றி அவரை கல்யாணம் செய்து கொண்ட மோனிகாவை பழி வாங்க துடித்தார் .அதன்படி நேற்று காலை அவர், மோனிகாவுடன் தகராறு செய்து, கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துவிட்டு தப்பியோடி விட்டார் .பின்னர் அக்கம்பக்கத்தினர் அந்த மோனிகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார் ..இந்த சம்பவம் பற்றி திப்பூரஹள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Contact Us