கும்மிருட்டில் வித்தியாசமாக போஸ் கொடுத்த மடோனா.. கண்களால் சொக்க வைக்கும் புகைப்படம்

பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கவண், பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பது மட்டுமின்றி நன்றாக பாடவும் செய்வார். தமிழ் மற்றும் மலையாளத்தில் சில பாடல்களை இவர் பாடியுள்ளார்.

மடோனா தற்போது தமிழில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீப காலமாக உடல் எடை சற்று கூடியிருந்த மடோனா இப்போது எடையை குறைத்துள்ளார்.

சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் லேட்டஸ்டாக ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் டார்க் மெரூன் கலர் உடையில் மிகவும் அழகாக ஜொலிக்கிறார். இந்த போட்டோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

பொதுவாக கேரளத்து நடிகைகள் அனைவருக்குமே கண்கள் மிக அழகாக இருக்கும். அதேபோல் இந்தப் புகைப்படத்தில் மடோனாவின் கண்கள் பார்ப்போரை சுண்டி இழுப்பது போல் உள்ளது.

இதை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் மடோனா மிகவும் அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இவர் தமிழில் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கின்றனர்.

Contact Us