பார்கலயா ? இப்படி ஒரு படத்தை இந்த நூற்றாண்டில் எடுக்கவே முடியாது- சூர்யாவை மிஞ்சிய நடிப்பு செங்கனி

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சி செய்திடாத ஜெய் பீம் கதையை துணிச்சலாக ஞானவேல் இயக்கியுள்ளார். பொலிசார் பெண்களை பிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு செல்வதும். யாருடா ஆம்பிள என்று கேட்டு பெண்ணின் பாவாடை நாடாவை அறுத்து அவரை நிர்வாணமாக்குவதும், பார்கவே பத பதைக்க வைக்கிறது. பழங்குடியின இருளர் சமுதாய பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய நீதி நிலைநாட்டுவதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ஜெய் பீம். இந்த 2 வருடத்தில் வெளியான ஒரு நல்ல படம் என்று கூறமுடியும்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அமேசான் ஓடிடி தளத்தில் ஜெய் பீம் படம் வெளியானது. இப்படத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், ராஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஜெய் பீம் படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருந்தார். இது ஒரு உண்மைக் கதை. படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் ஒரு முறை பாருங்கள். இதுவல்லவே படம்…

Contact Us