சொந்த சகோதரர் தொடர்பில் அக்கம்பக்கத்தினருக்கு இரகசிய கடிதம் எழுதி எச்சரித்த பெண்

சுவிட்சர்லாந்தில் ஆர்காவ் மாநிலத்தில் சொந்த சகோதரரின் மோசமான நடவடிக்கை தொடர்பில், அவரது சகோதரியே இரகசிய கடிதம் எழுதி பொதுமக்களை எச்சரித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த கடிதமானது ஆர்காவ் மாநிலத்தின் Hägglingen கிராம மக்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் ஹெலன் என்பவர், தமது சகோதரரின் குணம் பற்றி குறிப்பிட்டுள்ளதுடன், அவர் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

சமீபத்தில் தான் தாம் இப்பகுதிக்கு குடியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஹெலன், தமது சகோதரர் பலமுறை சிறார்களை சீரழித்துள்ளதை வெளிப்படையாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்துடன் அவர் அனைத்தையும் விட்டுவிட வேண்டும், யார் கண்ணீருக்கும் தமது சகோதரர் இனி பொறுப்பாக கூடாது என்பதே தமது ஆசை எனவும் ஹெலன் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் வயதில் தமது சகோதரரின் துன்புறுத்தலுக்கு இலக்கானதாகவும் ஹெலன் ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த கடிதம் கிராம மக்களிடையே விவாத பொருளாக மாறவே தற்போது ஆர்காவ் மாநில பொலிசார் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர்.

இதனிடையே, தொடர்புடைய கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெலனின் சகோதரர், நான் இன்னும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பை வழங்குமாறு எனது சகோதரியையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Contact Us