“ஸ்கார்பரோவில் தொடக்கப்பள்ளி அடைப்பு!”.. மாணவர்களுக்கு கொரோனா தொற்று.. வெளியான தகவல்..!!

ஸ்கார்பரோவில் ஒரு தொடக்கப்பள்ளியில் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, பள்ளியின் நிர்வாகம், பள்ளியை அடைக்க தீர்மானித்திருக்கிறது. அதாவது அப்பள்ளியை சேர்த்த மாணவர்கள் 11 பேருக்கும், பணியாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒன்ராரியோ மாகாணத்தில் செப்டம்பர் மாதத்திலிருந்து, கடந்த வெள்ளிக்கிழமை வரை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பள்ளியில் சுமார் 913 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனினும், அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து பள்ளிகளில் கொரோனா தொற்று ஏற்படுவது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Contact Us